Showing posts with label installation. Show all posts
Showing posts with label installation. Show all posts

Wednesday, 8 June 2016

லினக்ஸில் தமிழ் டைப்பிங் செய்வது எப்படி….?

லினக்ஸில் தமிழ் டைப்பிங் செய்வது எப்படி….?
ஒரு பேஸ்புக் நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க…… லினக்ஸில் தமிழில் டைப் செய்வது எப்படி என்பதை பற்றிய போஸ்ட் இன்றைக்கு போடலாம் என முடிவு செய்து…… இணயத்தில் தேடியதில்….  கிடைத்தது…. அதை நான் உங்களிடம் தமிழில் பகிர்கிறேன்……

முதலில் லினக்ஸில் டெர்மினலை ஓப்பன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்…..
முதலில் நாம் நமது லினக்ஸின் மென் பொருட்களை அப்டேட் செய்ய வேண்டும்…… எனவே
டெர்மினலில் பின் வருமாறு டைப் செய்து என்டரை தட்டவும்

sudo apt-get update
அப்டேட் ஆகி முடிந்ததும்……. பின் வருமாறு தட்டச்சு செய்து…… என்டர் செய்யவும்
sudo apt-get install ibus
தறவிறக்கம் நடந்து முடிந்ததும்…… மீண்டும் பின்வருமாறு என்டர் செய்யவும்
sudo apt-get install ibus-m17n
இப்பொழுது நமது லினக்ஸில் ibus என்கிற தமிழ் டைப்பிங் மென்பொருளை நிறுவுதல் செய்துவிட்டோம்..
பின்பு அதை நாம் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்….. எனவே பின் வருமாறு மெனுவில் தேர்வு செய்யவும்
System->Administration->Language Support
இப்பொழுது படத்தில் காட்டப் பட்டுள்ளது போல் காட்சி தெரியும்….



இதில் ibus என்பதை தேர்வு செய்யவும்….


படத்தில் சுட்டிக்காட்டியுள்ளபடி……
Install/remove language என்பதை தேர்வு செய்து 



 பின்பு…… தமிழ் என்பதை தேர்வு செய்துவிட்டு படத்தில் காட்டியுள்ளபடி….. டிக் செய்து கொள்ளுங்கள்…. பின்பு அப்ளை சேஞ்சஸ் என்பதை தேர்வு செய்க…..
இப்பொழுது…. System->Preferences->Keyboard Input Methods என்பதை தேர்வு செய்க.


பிறகு…


இப்பொழுது தமிழ் டைப்பிங் எனாபிள் செய்தாயிற்று 



என்பதில் தேர்வு செய்து தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பியுங்கள்…

குறிப்பு: இந்த செயல் முறையானது……. லினக்ஸ் மின்ட்….. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செய்யப்பட்டது….. வேறு லினக்ஸ் இயங்குதளங்களுக்கு இது மாறுபடலாம்……  சந்தேகங்கள்….. இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் அல்லது ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொள்ளலாம்…..

Monday, 26 October 2015

How to install hackpack




இந்தப் பதிவில் அட்மின் பேஜை எவ்வாறு கண்டு பிடிக்குறதுன்னு பாக்குறதுக்கு முன்னாடி  hackpack என்கிற டூல்ஸை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்பதை பார்க்கப் போகிறோம்
பொதுவா அட்மின் பேஜ் கண்டு பிடிக்க காலி லினக்ஸில் உள்ள websploit என்கிற டூலை யூஸ் பன்னுவாங்க ஆனால் அந்த டூல் ஆனது அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது,
சோ நாம அதுக்கு பதிலா வேர ஒரு டூல் யூஸ் பன்ன போறோம் அது காலி லினக்ஸில் கிடையாது, எனவே அந்த டூலை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்

முதலில் கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று lazykali.sh என்கிற செல் ஸ்க்ரிப்டை தரவிறக்கிக் கொள்ளவும்






பிறகு டெர்மினெல்லில் cd Downloads என்ற கட்டளை மூலம் Downloads 
என்ற ஃபோல்டரினுள் செல்லவும்

பிறகு
Chmod +x lazykali.sh என்ற கட்டளை மூலம் அந்த ஃபைலுக்கு execute permission கொடுக்கவும்

பிறகு   ./lazykali.sh    அல்லது sh lazykali.sh என்று டைப் செய்து என்டெர் செய்யவும் பின் வருமாறு தோன்றும்





இதில் y என்று டைப் செய்து என்டெர் செய்யவும்

பிறகு



மீண்டும்  y  என கொடுக்கவும் பின் வருமாரு தோன்றும் அதில்



Install extras  என்பதை 6 என்பதன் மூலம்  தேர்வு செய்யவும்


இதில் hackpack என்பதை தேர்வு செய்யவும்  அவ்ளோதான்  சிறிது நேரத்தில் உங்கள் சிஸ்டத்தில் hackpack install செய்யப்பட்டு விடும்
இந்த ஹேக்பேக்கில் பல டூல்கள் இருக்கும் அதில் உள்ள ஒரு டூலை யூஸ் செய்து  எவ்வாறு அட்மின் பேஜை கண்டறிவது என்பதை அடுத்த பதிவில் காண்போம்

நன்றி மக்களே…………

Sunday, 11 October 2015

காலி லினக்ஸ் இன்ஸ்டாலேசன்



ஒரு பேஸ்புக் நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க இன்று நான் காலி லினக்ஸ் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்பது பற்றி போஸ்ட் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன்,
காலி லினக்ஸை இரு வழிகளில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்

    1)நேரடியாக டிஸ்கில் இன்ஸ்டால் செய்வது        
   2)இரண்டாவது விர்ச்சுவல் மெஸினில் இன்ஸ்டால் செய்வது


நான் இரண்டாவது வழியையே பரிந்துரை செய்கிறேன் ஏன் என்றால்  முதலாவது வழியின் மூலம் இன்ஸ்டால் செய்யும்பொழுது ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் உங்களது ஹார்ட் டிஸ்க் ஃபார்மட் ஆக நேரிடலாம் கொஞ்சம் ரிஸ்க் எனவே விர்ச்சுவல் பாக்ஸ் மூலமாக இன்ஸ்டால் செய்வது எப்படி என்பதை இப்பொழுது சொல்கிறேன்

(ஹார்ட் டிஸ்கில் நேரடியாக இன்ஸ்டால் செய்வது எப்படி என்பதை கொஞ்சம் அனுபவம் வந்தவுடன் நீங்களே கற்றுக்கொள்ளலாம்)

முதலில் பின் வரும் லிங்கில் சென்று காலி லினக்ஸ் இயங்குதளத்தை(os) தறவிறக்கம்(download) செய்யவும்


(விர்ச்சுவல் மெசின் என்பதை யூஸ் பன்னுவதன் மூலம் நாம் ஒரே நேரத்தில் பல ஓஎஸ் களை யூஸ் பன்ன முடியும், அது உங்களின் கம்ப்யூட்டரின் நினைவகத்தை(memory) பொருத்து அமையும்)

பிறகு விர்ச்சுவல் மெசின் என சொல்லக்கூடிய விர்ச்சுவல் பாக்ஸ் ஐ  பின் வரும் லிங்கில் சென்று தரவிறக்கவும்


தரவிறக்கம் செய்த பிறகு விர்ச்சுவல் பாக்ஸை வின்டோஸில் இன்ஸ்டால் செய்யவும் 

பின்பு விர்ச்சுவல் பாக்சை ஓப்பன் செய்யவும்





அதில் new என்பதை க்ளிக் செய்யவும்
  
Create virtual machine என்று ஒரு வின்டோ ஓப்பன் ஆகும் அதில் name என்பதில் உங்கள் விருப்பம் போல் name வைத்துக் கொள்ளலாம்  டைப் என்பதில் linux
Version  என்பதில் கன்டிப்பாக டெபியான் என்று கொடுக்க வேண்டும், நான்  64 பிட் யூஸ் செய்வதால் debian(64-bit) எனறு கொடுத்துள்ளேன்

நீங்கள் 32 பிட் யூஸ் செய்தால் debian(32-bit) என்று கொடுத்து next கொடுக்கவும்





லினக்ஸை பொருத்தவரையில் 512 mb RAM  போதுமானது  எனவே 512 mb  கொடுத்து next  கொடுக்கவும்
 


பிறகு create கொடுக்கவும்




இங்கு vmdk என்பதை செலெக்ட் செய்து next கொடுக்கவும்


Next கொடுக்கவும்


பிறகு create என்பதை க்ளிக் செய்யவும்




பிறகு kali1 என்பதில் ரைட் க்ளிக் செய்து settings தேர்வு செய்யவும்




அங்கு  network என்பதை தேர்வு செய்து அதில் enable network adapter டிக் செய்து host-only adapter என்பதை  தேர்வு செய்யவும்   



பிறகு system என்பதை தேர்வு செய்து அதில் processor என்பதை தேர்வு செய்யவும் 


அதில் enable PAE/NX என்பதை டிக் செய்து  கீழே ok என்பதை கொடுக்கவும்

பின்பு start என்பதை கொடுக்கும் பொழுது ஒரு வின்டோ ஓப்பன் ஆகும் அதில் க்ளிக் செய்து browse செய்து நீங்க download  செய்த os file ஐ செலெக்ட் செய்து ok பன்னவும்

இப்பொழுது காலி லினக்ஸ் பூட் ஆக ஆரம்பிக்கும் பின் வருமாரு திரையில் 


தோன்றும் அதில் live என்பதை தேர்வு செய்வதன் மூலம் நாம் இயங்கு தளத்தை

நிறுவாமலே இயக்க முடியும்


நன்றி மக்களே………   மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்