Wednesday 8 June 2016

லினக்ஸில் தமிழ் டைப்பிங் செய்வது எப்படி….?

லினக்ஸில் தமிழ் டைப்பிங் செய்வது எப்படி….?
ஒரு பேஸ்புக் நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க…… லினக்ஸில் தமிழில் டைப் செய்வது எப்படி என்பதை பற்றிய போஸ்ட் இன்றைக்கு போடலாம் என முடிவு செய்து…… இணயத்தில் தேடியதில்….  கிடைத்தது…. அதை நான் உங்களிடம் தமிழில் பகிர்கிறேன்……

முதலில் லினக்ஸில் டெர்மினலை ஓப்பன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்…..
முதலில் நாம் நமது லினக்ஸின் மென் பொருட்களை அப்டேட் செய்ய வேண்டும்…… எனவே
டெர்மினலில் பின் வருமாறு டைப் செய்து என்டரை தட்டவும்

sudo apt-get update
அப்டேட் ஆகி முடிந்ததும்……. பின் வருமாறு தட்டச்சு செய்து…… என்டர் செய்யவும்
sudo apt-get install ibus
தறவிறக்கம் நடந்து முடிந்ததும்…… மீண்டும் பின்வருமாறு என்டர் செய்யவும்
sudo apt-get install ibus-m17n
இப்பொழுது நமது லினக்ஸில் ibus என்கிற தமிழ் டைப்பிங் மென்பொருளை நிறுவுதல் செய்துவிட்டோம்..
பின்பு அதை நாம் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்….. எனவே பின் வருமாறு மெனுவில் தேர்வு செய்யவும்
System->Administration->Language Support
இப்பொழுது படத்தில் காட்டப் பட்டுள்ளது போல் காட்சி தெரியும்….



இதில் ibus என்பதை தேர்வு செய்யவும்….


படத்தில் சுட்டிக்காட்டியுள்ளபடி……
Install/remove language என்பதை தேர்வு செய்து 



 பின்பு…… தமிழ் என்பதை தேர்வு செய்துவிட்டு படத்தில் காட்டியுள்ளபடி….. டிக் செய்து கொள்ளுங்கள்…. பின்பு அப்ளை சேஞ்சஸ் என்பதை தேர்வு செய்க…..
இப்பொழுது…. System->Preferences->Keyboard Input Methods என்பதை தேர்வு செய்க.


பிறகு…


இப்பொழுது தமிழ் டைப்பிங் எனாபிள் செய்தாயிற்று 



என்பதில் தேர்வு செய்து தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பியுங்கள்…

குறிப்பு: இந்த செயல் முறையானது……. லினக்ஸ் மின்ட்….. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செய்யப்பட்டது….. வேறு லினக்ஸ் இயங்குதளங்களுக்கு இது மாறுபடலாம்……  சந்தேகங்கள்….. இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் அல்லது ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொள்ளலாம்…..